உலங்குவானூர்தி விபத்து! - இருவர் பலி!

11 தை 2024 வியாழன் 18:49 | பார்வைகள் : 8456
இன்று ஜனவரி 11 ஆம் திகதி மாலை இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்து ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
Côte d'Azur மாவட்டத்தில் இந்த விபத்து மாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. R22 ரக விமானம் ஒன்றில் இருவர் பயணித்த நிலையில், La Playa Chica எனும் கடற்கரைக்கு அண்மையில் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானம் விழுந்து நொருங்கி தீப்பிடித்து எரிந்தது.
இச்சம்பவத்தில் விமானத்தில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.