அமைச்சரவையில் மாற்றம்! - புதிய அரச பேச்சாளர்!!

11 தை 2024 வியாழன் 16:10 | பார்வைகள் : 17459
கேப்ரியல் அத்தால் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அமைச்சரவையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சில அமைச்சு பதவிகள் மாற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, ஊடகப்பேச்சாளராக Prisca Thévenot தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இளைஞர் பிரதிநிதியாக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது ஊடக பேச்சாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இவர் Hauts-de-Seine மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
**
முன்னதாக இன்று பிற்பகல் பிரதமர் ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்திருந்தார். 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த உரையாடலை அடுத்தே இந்த அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025