அயலான் திரைப்படம் சிக்கலில்… நாளை வௌியாகுமா?
11 தை 2024 வியாழன் 14:23 | பார்வைகள் : 11622
கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி புகழ் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதையடுத்து அட்லீ இயக்கிய குறும்படங்களில் நடித்த அவர், தொடர்ந்து மெரினா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். தற்போது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படங்கள் டான் மற்றும் மாவீரன். இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
இதையடுத்து, அவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் அயலான். இப்படத்தில் இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர் ரவிக்குமார் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக அயலான் திரைப்படம் வௌியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்திற்காக பைனான்சியர் அசோசியேஷன், டிஎஸ்ஆர் நிறுவனம் பலரிடம் சுமார் 85 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், 85 கோடி கடனுக்கு சிவகார்த்திகேயன் உத்தரவு அளித்தால் தான் படம் வௌியாகும் என நிபந்தனை வைத்துள்ளனராம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan