Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஏ.ஆர் ரகுமான் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

 ஏ.ஆர் ரகுமான் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

11 தை 2024 வியாழன் 13:19 | பார்வைகள் : 11040


இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.

சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.

இந்நிலையில், இந்திய இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரகுமான் தான் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் இவர் பாடலுக்கு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

இவ்வளவு வருமானம் வாங்கியும், அவர் இப்படி எளிமையாக இருப்பதற்கு காரணம் அவருடைய எளிமைக்கு காரணம் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாயிராபானு தான். ஏ.ஆர் ரகுமான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாயிராபானு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். சாயிராபானு ஒப்பனையாளராக இருந்து வருகிறார். இதனால், ஏ.ஆர்.ரகுமான் அணியும், ஒவ்வொரு ஆடையும் சாயிராபானுவின் கைவண்ணம் தான். ஏ.ஆர்.ரகுமான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பல மேடைகளில் பயன்படுத்திய உடைகள் அனைத்தும் சாயிராபானுவின் கைவண்ணம் தான்.

இந்நிலையில், ஏ ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில், அவர் எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியபோது, என்னுடைய அம்மா நீ மற்றவர்களுக்காக வாழும் போது அந்த மாதிரியான எண்ணம் தோன்றாது என என்னிடம் கூறினார்கள். உண்மையில், நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்க மாட்டீர்கள். ஒருவருக்காக இசையமைப்பதாக இருக்கலாம், உணவு வாங்கிக் கொடுப்பதாக இருக்கலாம், அல்லது வெறும் புன்னகையை கூட உதிர்க்கலாம் இந்த மாதிரியான விஷயங்கள் தான் வாழ்க்கையில் உடன் உங்களை பயணிக்க வைக்கும் என்று ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்