பரிசில் மூடப்படும் ஆரம்ப பாடசாலை வகுப்புகள்! - நகரசபை கண்டனம்!!

11 தை 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 10080
தலைநகர் பரிசில் வசிக்கும் பலர் இல் து பிரான்சின் வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருவதாக சமீபத்தில் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்திருந்தது. மக்கள் தொகை குறைவடைவதாகவும், குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2023 ஆம் கல்வி ஆண்டில் 125 இற்கும் மேற்பட்ட ஆரம்ப பாடசாலைகள் வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 155 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலையை இழந்துள்ளனர்.
இந்த விபரங்கள் கவலையளிப்பதாகவும், வகுப்பறைகள் மூடப்படுவது கண்டனத்துக்குரியது எனவும் பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
“ இது ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் மோசமான செய்தி, ஆரம்ப பாடசாலை வகுப்புகள் 150 மூடப்படுவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன” என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.
இந்த வகுப்பறைகளின் எண்ணிக்கையானது 19 பாடசாலைகள் மூடப்படுவதற்கு சமனானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025