யாழில் பேருந்து நிலைத்தில் வாள்வெட்டு - சாரதி படுகாயம்!

11 தை 2024 வியாழன் 02:38 | பார்வைகள் : 10864
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் தனியார் பேருந்து சாரதி மீது நேற்று அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முகமூடி அணிந்து உந்துருளியில் வந்தவர்கள் குறித்த தனியார் பேருந்து சாரதி மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த பேருந்து சாரதியை ஊடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டை நடத்தியவர்கள் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025