Essonne : பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவனைக் கடித்து குதறிய நாய்!

10 தை 2024 புதன் 18:16 | பார்வைகள் : 13775
வளர்ப்பு நாய் ஒன்று சிறுவன் ஒருவரைக் கடித்து குதறியுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Saint-Germain-lès-Arpajon (Essonne) நகரில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் பாடசாலையை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. கை மற்றும் தொடைப்பகுதியில் கடித்து பிய்த்து எடுத்துள்ளது.
குறித்த சிறுவன் படுகாயமடைந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
சிறுவனைக் கடித்து விட்டு நாய் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாயின் உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025