பேரிழப்பை சந்திக்கும் இஸ்ரேல் படையினர்
10 தை 2024 புதன் 10:10 | பார்வைகள் : 9186
காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தி வருகின்றது.
காசாவில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டு மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிழமை மாலை இஸ்ரேலிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட புதிய விவரங்களின்படி,
கொல்லப்பட்ட ஆறு இஸ்ரேலிய வீரர்கள் மத்திய காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பின் நிலத்தடி ரொக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
அத்துடன் கான் யூனிஸில் இரண்டு வீரர்கள் இறந்த மற்றொரு சம்பவமும், வேறொரு இடத்தில் மற்றொரு சிப்பாய் இறந்த மூன்றாவது சம்பவமும் பதிவாகியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan