Paristamil Navigation Paristamil advert login

இலங்கை அணியில  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பற்றுச்சீட்டு இலவசம்

இலங்கை அணியில  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பற்றுச்சீட்டு இலவசம்

10 தை 2024 புதன் 10:02 | பார்வைகள் : 4734


இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறித்த போட்டியானது, நாளை 11.01.2024 கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விளையாட்டரங்கில் சி மற்றும் டி பிரிவுகளிலுள்ள ஆசனங்களே இவ்வாறு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பார்வையாளர்கள் நுழைவதற்காக நுழைவு வாயில்கள் பிற்பகல் 01 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடைபெறவிருக்கும் t20 போட்டியைக் காண www.srilankacricket.lk மற்றும் பிரேமதாச மைதானத்திலும் பற்றுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும்.

அத்துடன், காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை பற்றுச்சீட்டு கவுண்டர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

t20 போட்டிகள் ஜனவரி 14, 16 மற்றும் 18 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்