''அர்ஜுனா விருது'' பெற்ற முகமது ஷமி நெகிழ்ச்சி

9 தை 2024 செவ்வாய் 09:17 | பார்வைகள் : 5701
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதியிடம் அர்ஜுனா விருது பெற்றார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர வைத்தார்.
இதன்மூலம் ஷமியின் பெயர் விருதுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கும் விழாவில் ஷமிக்கு ''அர்ஜுனா'' விருது வழங்கப்பட்டது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.
அதன் பின்னர் விருது பெற்றது குறித்து ஷமி கூறும்போது,
'இந்த விருது ஒரு கனவு, வாழ்க்கை கடந்து செல்கிறது. இந்த விருதை மக்களால் வெல்ல முடியவில்லை.
இந்த விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025