காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

9 தை 2024 செவ்வாய் 08:24 | பார்வைகள் : 7563
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் காஸாவில் கடந்த 7 ஒக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 249 போ் உயிரிழந்ததுடன் 510 பேர் காயமடைந்தனர்.