யாழ் சென்ற கணவர் - வெள்ளவத்தையில் 8 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து பெண் மரணம்
9 தை 2024 செவ்வாய் 08:14 | பார்வைகள் : 8776
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 8 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு 6 பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாவார்.
இவரது கணவர் சில நாட்களுக்கு முன்னர் தனிப்பட்ட வேலை நிமித்தம் யாழ்ப்பாணம் பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று குறித்த பெண் அவரது மகன் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வீட்டிலிருந்த கதிரை ஒன்றை 8 ஆவது மாடிக்கு எடுத்துச்சென்று அதில் ஏறி கீழே குதித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இவரது சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan