◉ வெள்ளம், பனிப்பொழிவு - Essonne - Yvelines உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

9 தை 2024 செவ்வாய் 05:41 | பார்வைகள் : 8666
நாட்டின் 80 சதவீதமான மாவட்டங்களுக்கு பனிப்பொழ்வு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இல் து பிரான்சின் இரு மாவட்டங்களுக்கு வெள்ளம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Essonne மற்றும் Yvelines ஆகிய இல் து பிரான்சைச் சேர்ந்த மாவட்டங்களுக்கு பனிபொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, Nord(59) மற்றும் Pas-de-Calais(62) ஆகிய மாவட்டங்களுக்கும் வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் வீதிகளில் மெதுவாக பயணிப்பதை தொடர்ந்து, நேற்று இரவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025