பிரித்தானியாவிற்கு காத்திருக்கும் பேராபத்து - அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை!
 
                    11 மார்கழி 2023 திங்கள் 08:34 | பார்வைகள் : 7344
பிரித்தானியாவில் 2040 இல் இருந்து 2050 ஆம் ஆண்டு வரை பேராபத்து காத்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் சில பகுதிகள் 2040 மற்றும் 2050 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸை பரப்பும் திறன் கொண்ட நுளம்புகள் இருப்பிடமாக மாறக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் பாதிக்கப்பட்ட முதல் நாடாக இங்கிலாந்து காணப்படும் என்றும்,
வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்கொட்ல்ந்தின் சில பகுதிகளும் பாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் தொடர்பான இறப்புகளின் அதிகரிப்பு மற்றும் வெள்ளத்தல் ஏற்படக்கூடியதாக்கங்களும் இதில் அடங்கும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் விரைவான நடவடிக்கை மூலம் சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான சர்வதேச நாடுகள் அதன் கடமைகள் சரியாக செய்யவில்லை என்றால் அது மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan