சீரற்ற காலநிலை : ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
11 மார்கழி 2023 திங்கள் 06:40 | பார்வைகள் : 13653
சீரற்ற காலநிலை காரணமாக இன்று திங்கட்கிழமை நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Gironde, Corrèze, Dordogne, Deux-Sèvres, Isère, Savoie மற்றும் Haute-Savoie ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ளம் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக குறித்த மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும், சில இடங்களில் மின் தடை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை செவ்வாய்க்கிழமை காலை வரை விடுக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan