பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடுவதாக நம்பும் மக்கள்! - கருத்துக்கணிப்பு!!

10 மார்கழி 2023 ஞாயிறு 16:10 | பார்வைகள் : 11934
பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடுவதாக பிரான்சில் வசிக்கும் பத்தில் எட்டு பேர் நம்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் ஊழலில் ஈடுபடுவதாக 87% சதவீதமான பொதுமக்கள் நம்புகின்றனர். கிட்டத்தட்ட 10 இல் ஒன்பது பேர் அதனை தீர்க்கமாக நம்புவதாக கருத்துக்கணிப்பினை முன்னெடுத்த Fondation Jean-Jaurès நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற ஒரு கருத்துக்கணிப்பில், 91% சதவீதமானவர்கள் இதே கருத்தை தெரிவித்திருந்தனர்.
இரஷ்யாவில் வசிக்கும் 69% சதவீதமான மக்கள் தங்கள் நாட்டு அரசியல் தலைவர்கள் ஊழலில் ஈடுபடுவதாக நம்புகின்றதாகவும், இரஷ்யாவை விட பிரான்ஸ் அதிகளவில் ஊழலில் ஈடுபவதாக தாம் நம்புவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025