சீரியல் நடிகையை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி!
10 மார்கழி 2023 ஞாயிறு 14:31 | பார்வைகள் : 10584
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி அதன் பின்னர் ’எல்கேஜி’ ’டாக்டர்’ ’அண்ணாத்த’ ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ ’ஏஜென்ட் கண்ணாயிரம்’ ’காரி’ ’கட்டா குஸ்தி’ ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ’ஜெயிலர்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இன்னும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சீரியல் நடிகை சங்கீதாவை இன்று அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சங்கீதா சீரியல்களில் மட்டும் இன்றி ’பாரிஸ் ஜெயராஜ்’ ’மாஸ்டர்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan