Seine-et-Marne : காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த ஸ்கூட்டர்! - விபத்தில் இளைஞன் பலி!!
 
                    10 மார்கழி 2023 ஞாயிறு 11:29 | பார்வைகள் : 15183
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த ஸ்கூட்டர் (scooter) ஒன்றில் பயணித்த 17 வயதுடைய ஒருவர் விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு இவ்விபத்து Chelles (Seine-et-Marne) நகரில் இடம்பெற்ற்ள்ளது. Neuilly-sur-Marne (Seine-Saint-Denis) நகரில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ஸ்கூட்டரில் பயணித்த குறித்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, அவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்துள்ளார்.
காவல்துறையினர் குறித்த நபரை துரத்திச் சென்றனர். மிக வேகமாக பயணித்த அவர், இரண்டு கிலோமீற்றருக்கும் அதிகமாக பயணித்து Chelles (Seine-et-Marne) நகரில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
இரவு 11 மணி அளவில் இடம்பெற்ற இவ்விபத்தை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை காலை அவர் பலியானார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் அதே வேளையில், சம்பவத்தில் ஈடுபட்ட BAC காவல்துறையினர் மீதும் விசாரணை இடம்பெற்று வருகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
        காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.         
     


 
        
        .jpeg) 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan