முரளி குடும்பத்தில் இருந்து களமிறங்கும் மற்றொரு நடிகர்?
 
                    10 மார்கழி 2023 ஞாயிறு 06:30 | பார்வைகள் : 6150
தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராக வளம்வந்து கொண்டிருப்பவர் தான் லிங்குசாமி. கடந்த 2001ம் ஆண்டு வெளியான மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி அவர்களின் "ஆனந்தம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் தமிழ் திரை உலகில் களமிறங்கினார் அவர்.
ஆனந்தம் படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான மாதவனின் ரன், தல அஜித்தின் ஜி, விஷாலின் சண்டக்கோழி, விக்ரமின் பீமா, கார்த்தியின் பையா மற்றும் சூர்யாவின் அஞ்சான் என்று அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றியடைந்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் படங்களை இயக்காத இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், கடைசியாக வெளியான திரைப்படம் "தி வாரியர்" தான்.
இந்நிலையில் அவர் பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க உள்ளார் என்கின்ற தகவல்கள் இவ்வாண்டு துவக்கத்திலேயே வெளியானது. மேலும் நடிகர் கார்த்தி அவர்கள் தான் மீண்டும் அந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. தற்பொழுது அந்த திரைப்படம் விரைவில் துவங்க உள்ளதாகவும் லிங்குசாமி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கார்த்தி அவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிஸியாக இருப்பதன் காரணமாக பிரபல நடிகர் முரளி அவர்களுடைய இளைய மகனும், அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி அந்த திரைப்படத்தில் நாயகனாக களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan