கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
9 மார்கழி 2023 சனி 16:42 | பார்வைகள் : 6740
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் காங்ககேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில் பாதையில் திட்டமிடப்பட்ட இரண்டாம் கட்ட பராமரிப்புப் பணிகள் மஹவ மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்பராமரிப்பு பணிகள் 7 ஜனவரி 2024 முதல் மேற்கொள்ளப்படும் எனவும் ஆறு மாதங்களுக்குள் இதனை முடிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
எனவே, இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ புகையிரத நிலையம் வரையிலும் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையிலும் மாத்திரம் ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan