இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாயப்பு - ஆசைக்காட்டி ஏமாற்றும் பெண்
9 மார்கழி 2023 சனி 10:50 | பார்வைகள் : 12357
தென்கொரியாவில், வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களிடமிருந்து, சுமார் ஒரு கோடியே 65 இலட்சம் ரூபாயை மோசடி செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தொடர்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்த பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 44 வயதான அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் இருந்து, 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் கட்டணம் அறவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan