Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவில் அதிபர் தேர்தல் -  போட்டியிட தயாராகும் விளாடிமிர் புடின்!

ரஷ்யாவில் அதிபர் தேர்தல் -  போட்டியிட தயாராகும் விளாடிமிர் புடின்!

9 மார்கழி 2023 சனி 09:12 | பார்வைகள் : 9507


ரஷ்யாவில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஆண்டு 2024 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெறுவது உறுதி என்று விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

பல சர்வதேச நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளன.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கூலிப்படைத் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் கடந்த ஜூன் மாதம் நடத்திய ஒரு குறுகிய கிளர்ச்சியின் போது, புடின் தனது பிடியை இழக்கக்கூடும் என்ற பரவலான ஊகங்கள் எழுந்துள்ளன.

அந்த சம்பவம் நடந்து இரு மாதங்களில் மர்மமான விமான விபத்தில் பிரிகோஜின் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து விளாடிமிர் புடினின் செல்வாக்கு மேலும் வலுபெற்றது.

Tass மற்றும் RIA Novosti மாநில செய்தி நிறுவனங்களின்படி, மார்ச் 17 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை புடின் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

லெவாடா நிலையத்தின் சுயாதீன கருத்துக் கணிப்பீட்டின்படி, சுமார் 80 வீத மக்கள் புடினின் செயல்திறனை அங்கீகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆதரவு இதயத்திலிருந்து வரலாம் அல்லது ஆபத்தானதாக மாற்றிய ஒரு தலைவருக்கு அடிபணிவதைப் பிரதிபலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்