யாழில் வீடு புகுந்த கும்பல் அட்டகாசம் - மூவர் கைது
9 மார்கழி 2023 சனி 04:29 | பார்வைகள் : 13016
கொடிகாமம் பகுதியில் உள்ள இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து சேதப்படுத்தி நகை பணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் இன்று (09) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி பகுதியில் கடந்த புதன்கிழமை வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் இருந்த நகை,பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
காயப்பட்ட இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan