Val-d'Oise : காவல்துறையினர் போன்று வேடமணிந்து நூதன கொள்ளை!!
8 மார்கழி 2023 வெள்ளி 17:48 | பார்வைகள் : 9629
கொள்ளையார்கள் சிலர் காவல்துறையினர் போன்று வேடமணிந்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று Val-d'Oise மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
Sarcelles நகரில் வசிக்கும் 85 வயதுடைய பெண் ஒருவரது வீட்டுக்குள் புதன்கிழமை மாலை காவல்துறையினரின் உடையுடன் நுழைந்த நால்வர், குறித்த பெண்ணை ஏமாற்றி அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.
கொள்ளையிட்ட பொருட்களின் மொத்த பொருட்களின் பெறுமதி 300,000 தொடக்கம் 500,000 யூரோக்கள் வரை இருக்கலாம் என முதல்கட்டமாக காவல்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.
இல் து பிரான்சுக்குள் தனியே வசிக்கும் வயதானவர்களை இலக்கு வைத்து இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவது அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan