Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம்

இலங்கையில் மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம்

8 மார்கழி 2023 வெள்ளி 14:11 | பார்வைகள் : 5783


இலங்கையில் மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் நாளை முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, சாதாரண தர மதுபானசாலைகளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அனுமதி பெறாத மதுபானசாலைகள் முற்பகல் 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அனுமதி பெற்ற மதுபானசாலைகள் முற்பகல் 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்