துணை நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது!
7 மார்கழி 2023 வியாழன் 09:12 | பார்வைகள் : 6820
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாகி வருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பன் கேஷவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஜகதீஷ். முதல் பாகத்திலும் நடித்துள்ளார், இரண்டாம் பாகத்திலும் அவருக்கு படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாம்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜகதீஷ் தலைமறைவாகி இருந்தார். ஜுனியர்நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பின்தான் அவர் தலைமறைவாகி இருக்கிறார். அப்பெண்ணின் தந்தை தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்ததைத் தொடர்ந்து பஞ்சகுட்டா போலீசார் ஜகதீஷைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சக நடிகை ஒருவரது தற்கொலைக்கு ஒரு நடிகரே காரணமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகையை ஜகதீஷ் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நடிகையின் அப்பா குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan