தீவிர மதவாதிகளை சிறைவையுங்கள் - மக்களின் ஆணை!!
6 மார்கழி 2023 புதன் 19:15 | பார்வைகள் : 10438
ஏற்கனவே தீவிர மதவாத, முக்கியமாக தீவிர மற்றும் பயங்கரவாத இஸ்லாமியவாதத்திற்காகச் சிறைத்தண்டனை பெற்று விடுதலையான ஒருவர், ஈபிள் கோபுரத்தின மீது தாக்குதல் நடாத்த முற்பட்டுக் கைது செய்யப்பட்டமை பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது.
தீவிரமதவாதம் மற்றும் பயங்கரவாதத் தொடர்பிற்காகத் தண்டனை பெற்று விடுவிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்படல் வேண்டும் என, முக்கியமான ஊடகம் ஒன்று செய்த கருத்துக் கணிப்பில் 86 சதவீதமான பிரெஞ்சு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பலர் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தும் அபாயமுள்ளவர்களை (S கண்காணிப்பு) தாக்குதலைத் தடுப்பதற்காக முற்கூட்டியே சிறையில் அடைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதிலும் S கண்காணிப்பில் உள்ளவர்களில் மனநோய் அறிகுறி உள்ளவர்களை, உடனடியாகப் பாதுகாப்புக் காரணம் கருதி சிறைவைக்கவேண்டும் எனவும் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மற்றைவர்கள், தீவிர இஸ்லாமியவாதக் குற்வாளிகள் தண்டனை பெற்று வெளியே வந்தாலும், அவர்களை மிகத் தீவிரமாகத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் நடந்த பெரும்பாலான பயங்கரவாதத் தாக்குதல்கள், முன்னாள் தீவிரமதவாதக் கைதிகளாலேயே நடாத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan