ஒலிம்பிக் 2024 : 10,000 தங்குமிடங்கள் கண்காணிக்கப்படும்!
6 மார்கழி 2023 புதன் 18:24 | பார்வைகள் : 12034
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்பாக 10,000 தங்குமிடங்களில் கண்காணிப்புச் சோதனை இடம்பெறும் என சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சுற்றுலாப்பயணிகள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற வசதிகள் செய்யப்படுமா என்பது தொடர்பிலும், மோசடிகள் அல்லது ஏதேனும் அசெளகரியங்கள் ஏற்படுமா என்பது தொடர்பிலும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படும் என அமைச்சர் Olivia Grégoire தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் 4,300 உணவங்கள், தங்குமிடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மேலும் 10,000 இடங்கள் சோதனையிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்..
அதேவேளை, விலை கட்டுப்பாடு தொடர்பில் தெரிவிக்கையில், 'ஒலிம்பிக் போட்டிகளின் போது விலைக் கட்டுப்பாடுகள் இருக்கப்போவதில்லை. ஆனால் அந்த விலைக்குரிய வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்தப்படும்!' எனவும் தெரிவித்தார்.

























Bons Plans
Annuaire
Scan