23 வயதில் தனது நீண்டநாள் காதலியை மணந்த கிரிக்கெட் வீரர்

6 மார்கழி 2023 புதன் 10:52 | பார்வைகள் : 6968
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜெரால்டு கோட்ஸி தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்.
2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்க அணியில் பந்துவீச்சில் மிரட்டியவர் 23 வயதாகும் ஜெரால்டு கோட்ஸி (Gerald Coetzee).
அவர் 8 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மேலும் லீக் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (18) கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் கோட்ஸி பெற்றார்.
இந்த நிலையில் கோட்ஸிக்கும், அவரது நீண்ட நாள் காதலி ஹன்னா ஹதோர்னுக்கும் (Hannah Hathorn) திருமணம் நடந்துள்ளது.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் புதுமணத் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜெரால்டு கோட்ஸி தென் ஆப்பிரிக்க அணிக்காக 14 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், 2 டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1