நேரில் சென்று உதவிய அஜித்...
6 மார்கழி 2023 புதன் 08:32 | பார்வைகள் : 12042
பாலிவுட் நடிகர் அமீர் கானின் அம்மா சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுகிறார். இதற்காக சென்னையில் முகாமிட்டுள்ள அவர் கடந்த சில நாட்களாக நடிகர் விஷ்ணு விஷாலின் காரப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்தார்.
சென்னையில் பெய்த பெருமழையால் தான் வெள்ளத்தில் சிக்கி இருப்பதாக போட்டோ வெளியிட்டார் விஷ்ணு விஷால். அவரை மீட்பு படையினர் படகு மூலம் மீட்டனர். விஷ்ணு விஷால், அவரது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் நடிகர் அமீர் கான் உள்ளிட்டவர்களும் மீட்கப்பட்டனர். இதற்காக நன்றி தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.
இந்நிலையில் மற்றொரு பதிவில் அஜித் குமார் உடன் அமீர்கான், விஷ்ணு விஷால் இருக்கும் போட்டோ வைரலாகியது. இதுபற்றி விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், ‛‛நாங்கள் இருந்த நிலையை அறிந்து எங்களுக்கு பொதுவான நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட நடிகர் அஜித், எங்கள் வில்லாவை சேர்ந்த 30 பேருக்கும் பயண வசதியை ஏற்படுத்தி தந்தார். எப்போதும் உதவும் தன்மையை கொண்டவர் அவர். லவ் யூ அஜித் சார் என குறிப்பிட்டார்.
அஜித்துடன் அமீர்கான், விஷால் விஷால் தவிர்த்து விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவலா கட்டா உள்ளிட்டோர் இருக்கும் போட்டோவும் வைரலாகின.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan