Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்வர்யா ராய்யை விவாகரத்து செய்கிறாரா அபிஷேக் பச்சன்?

ஐஸ்வர்யா ராய்யை விவாகரத்து செய்கிறாரா அபிஷேக் பச்சன்?

6 மார்கழி 2023 புதன் 08:20 | பார்வைகள் : 6580


ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து உமர் சந்து பேசியுள்ளது மட்டும் இன்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அபிஷக் பச்சனின் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. 

ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் மகிழ்ச்சியாக இல்லை என்று, உமர் சந்து  ட்வீட் செய்துள்ளார். இது தவிர, சமீபத்தில் ஒரு ஊடக நிகழ்வில் காணப்பட்ட அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை. மறுபுறம், அபிஷேக் ஐஸ்வர்யாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடரவில்லை என்றும் வதந்திகளும் உள்ளன. 

இதுகுறித்து உமர் சந்து கூறுகையில், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வு இருப்பதாகவும், அவர்கள் பிரிந்து செல்ல தயாராகி வருவதாகவும் கூறுகிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. தற்போது அபிஷேக் பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

அதே நேரம் இது உண்மையான தகவல் இல்லை எனக் கூறப்படுகிறது. கையில் மோதிரம் இல்லை என்றால் விவாகரத்து என்று அர்த்தமா என ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்