ஹெலிகாப்டரில் 20 ஆயிரம் உணவு பொட்டலம் விநியோகம்
5 மார்கழி 2023 செவ்வாய் 15:24 | பார்வைகள் : 6900
சென்னையில் மழைநீர் புகுந்ததால்,வீட்டு மாடிகளில் தங்கியிருப்போருக்கு உணவு வழங்குவதற்காக 20 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளன, இந்த 20 ஆயிரம் உணவு பொட்டலங்களை ஹெலிகாப்டரில் உணவு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.விரைவில் சென்னை மற்றும் புறநகரில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்


























Bons Plans
Annuaire
Scan