தத்தளிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்!
5 மார்கழி 2023 செவ்வாய் 09:58 | பார்வைகள் : 7703
மிக்ஜாம் புயல் சென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களோடு சேர்ந்து பல திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இதில் நடிகர் சூர்யா- கார்த்தி 10 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்தனர். இதேபோல இன்னொரு பக்கம் திரைப் பிரபலங்களும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள தங்களது ஏரியாவின் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து நடிகர் விஷால் சென்னை மேயர் பிரியாவை டேக் செய்து ஏன் இந்த அவலநிலை என்ற கேள்வியையும் எழுப்பினார். அதற்கு மேயர் பிரியா, 'அரசியல் செய்யாதீர்கள். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார். அதே போல, இன்று நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டில் வெள்ள நீர் சூழந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய பதிவில் விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது, 'காரப்பாக்கத்தில் உள்ள என் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. அதன் அளவும் போகப்போக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவி கேட்டு அழைத்திருக்கிறேன். இங்கு கரண்ட் இல்லை. வைஃபை இல்லை. ஃபோன் சிக்னல் இல்லை. எதுவுமே இல்லை. என் வீட்டு மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது.
எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன். சென்னை மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்' என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் நிலைமை இயல்புக்கு திரும்பி விடும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan