Paristamil Navigation Paristamil advert login

இளம் தலைமுறையினரை கவரும் இலத்திரனியல் சிகரெட்! - தடை விதித்த பாராளுமன்றம்!!!!

இளம் தலைமுறையினரை கவரும் இலத்திரனியல் சிகரெட்! - தடை விதித்த பாராளுமன்றம்!!!!

5 மார்கழி 2023 செவ்வாய் 08:22 | பார்வைகள் : 7764


இளைஞர்களிடையே புதிய மோகப்பொருளாக மாறியுள்ளது இந்த இலத்திரனியல் சிகரெட். ஒருதடவை மட்டும் பயன்படுத்தும் இவ்வகை சிகரெட்டுகள் உடலுக்கு தீங்கானவையுடன், சுற்றுச்சூழலுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துபவையாகும். 

நிக்கோடினுடன் சில பழங்களில் சுவைகளையும் இணைத்து இவ்வகை சிகரெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.  இந்த சிகரெட்டுகளின் ஆபத்தினை உணர்ந்த அரசு, இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டது. அதில் மேற்குறித்த சிகரெட்டினை தடை செய்வது என ஏகமனதாக முடிவெடிக்கப்பட்டது. 

மிக விரைவில் இவ்வகை சிகரெட்டுகள் பிரான்சில் தடை விதிக்கப்படும் எனவும், அதற்கு முன்னதாக செனட் மேற்சபையினர் இது தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்றில் ஈடுபடுவார்கள் எனவும் அறிய முடிகிறது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்