வெளிநாடு ஒன்றில் இருந்து 35 இலங்கையர்கள் நாடு கடத்தல்!
4 மார்கழி 2023 திங்கள் 14:55 | பார்வைகள் : 14986
விசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த நிலையில், நாடு கடத்தப்பட்ட 35 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 230 விமானத்தின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன், இவ்வாறு நாட்டுக்கு வந்தடைந்தவர்களில் 34 வீட்டுப்பணிப்பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan