மீண்டும் அரசியல் கதையில் சூர்யா..

4 மார்கழி 2023 திங்கள் 12:55 | பார்வைகள் : 7412
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஒரு புதிய கதை களத்தோடு உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சிறுத்தை சிவா மிக நேர்த்தியாக இயக்க, பிரபல நடிகர் சூர்யா இந்த திரைப்படத்திற்காக பல சிரமங்களை மேற்கொண்டு நடித்து வருகிறார். விரைவில் அந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் முடிய உள்ள நிலையில், ஏற்கனவே சூர்யாவின் பகுதிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்பட பணிகளை முடித்த பிறகு பிரபல இயக்குனர் சுதா கொங்கார உடன் இரண்டாவது முறை நடிகர் சூர்யா இணைய உள்ளார். இந்த திரைப்படம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்த களத்தை பேசும் ஒரு திரைப்படமாக அமைய உள்ளது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சூறாவை போற்று என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்கிய சுதா கொங்கார, மிக நேர்த்தியாக கதைகளை தேர்வு செய்து இதற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யா ஒரு கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார் என்றும் இதற்கான படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் நஸ்ரியா விஜய் பர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் ஜி வி பிரகாஷ் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்காக பல பிரத்தியேக உடற்பயிற்சிகளை சூர்யா மேற்கொள்ளல்ல நிலையில் ஏற்கனவே அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துவரும் வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகளை இந்த திரைப்படத்தை முடித்த பிறகு மேற்கொள்வாரா? அல்லது இரு படங்களையும் ஒரு சேர நடிப்பாரா? என்பது குறித்த சந்தேகங்கள் தற்பொழுது எழுந்துள்ளது. விரைவில் அதற்கான பதில்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025