Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் பரவி வரும் நோய்த் தொற்று....

கனடாவில் பரவி வரும் நோய்த் தொற்று....

4 மார்கழி 2023 திங்கள் 06:16 | பார்வைகள் : 7472


கனடாவின் மத்திய சுகாதார அலுவலகம் சளிக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுவதாக   எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் சளிக்காய்ச்சல் தொற்று பரவுகை கூடுதலாக பதிவாகி வருவதாக ரொறன்ரோ மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோய்த் தொற்று பரவுகையை தடுக்கவும், நோய்த் தொற்றிலிருந் பாதுகாத்துக் கொள்ளவும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாகாணத்திற்கு மாகாணம் சளிக்காய்ச்சல் தொற்றாளர் எண்ணிக்கை மாறுபட்ட அளவில் காணப்படுவதாக கனடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் கூடிய விரைவில் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது ஆபத்துக்களை தவிர்க்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்