அரசின் - குடிவரவு சட்டத்தை எதிர்த்து பரிசில் ஆர்ப்பாட்டம்!
 
                    4 மார்கழி 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 11838
அரசாங்கத்தின் குடிவரவு சட்டத்தை (loi immigration du gouvernement) எதிர்த்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
Place d'Italie இற்கு முன்னாள் குவிந்த ஆயிரம் பேர் வரையான மக்கள், அனைவருக்குமான நீதி கேட்டு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரான்சில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் “marche contre le racisme” (இனவெறிக்கு எதிரான ஊர்வலம்) எனும் எழுச்சிப் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குடியேற்றவாதிகளுக்கு சமத்துவம் கிடைக்கப்படவில்லை எனவும், இனவாதம் கொண்டு பார்க்கப்படுகிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டு அரசாங்கத்துக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.
அதன் 40 ஆவது ஆண்டு நினைவு நாளில், நேற்று மீண்டும் பரிசில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
"40 ஆண்டுகளுக்குப் பிறகும், பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை. இனவாதம் இன்னும் உள்ளது. இந்த சமத்துவமின்மைக்கு எதிராக நாங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோம்.” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆவணமற்ற தொழிலாளர்களை அரசு கருத்தில் கொள்ளவேண்டும் எனவும், ஆவணமற்ற மாணவகள் மற்றும் இனவாதம் காரணமாக குறைந்த ஊதியம் வழங்கப்படுவதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் கோரினார்கள்.
காவல்துறையினர் தெரிவித்த தகவலின் படி , 1,100 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அறிய முடிகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan