திருகோணமலையில் தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்கத்தினால் நேர்ந்த விபரீதம்
3 மார்கழி 2023 ஞாயிறு 11:49 | பார்வைகள் : 7589
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழநது
உயிரிழந்தவர் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த கே.கவிதா (வயது 47) என்பவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது :
உறவினர் ஒருவருக்கு 20 பவுண் நகை வழங்கியது தொடர்பில் தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இருவரும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
இந்த இருவரும் நேற்று சனிக்கிழமை (02) இரவு 11 மணியளவில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து, குறித்த தாய் சிகிச்சை பலனின்றி மறுநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் குறித்த தாய் சிகிச்சையளிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிய வருகிறது.
இந்நிலையில், குறித்த மகள் களத்துக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸ் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan