ஆஸ்திரேலியாவில் 10,000 டோனட்கள் திருட்டு!

3 மார்கழி 2023 ஞாயிறு 08:11 | பார்வைகள் : 7463
ஆஸ்திரேலியாவில் டோனட்களை (doughnut) திருடியவரைத் தேடும் முயற்சியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
சிட்னி நகருக்கு அருகே Krispy Kreme கடையின் 10,000 டோனட்கள் விநியோகத்திற்கு அனுப்பப்பட்டபோது திருடப்பட்டன.
டோனட்கள் நியூகாசல் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வேனைப் பழுதுபார்ப்பதற்கு ஓட்டுநர் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தினார்.
அவர் பழுதுபார்க்கும் நிலையத்துக்குள் சென்றபோது ஒருவர் வேனை ஓட்டிக்கொண்டு சென்றதாகக் கூறப்பட்டது.
கண்காணிப்புக் கேமராவில் ஒரு பெண் பதிவான நிலையில் திருடிய பெண்னை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025