அமலாக்க துறை அதிகாரியை சிக்க வைத்த டாக்டர் பற்றி
3 மார்கழி 2023 ஞாயிறு 10:46 | பார்வைகள் : 8169
மதுரை அமலாக்கத் துறை அதிகாரியை, லஞ்ச வழக்கில் சிக்க வைத்த டாக்டர் சுரேஷ்பாபு, தி.மு.க., ஆதரவாளர் என உலா வரும் சமூக வலைதள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கழக டாக்டர் தான் இவரு... ஆபீசர் கார்ல யாருக்கும் தெரியாமல் பணத்தை வச்சாராம்' என்ற தலைப்பில், சமூக வலைதளங்களில் உலா வரும் பதிவு:
பல கோடி ரூபாய் ஊழல் செய்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள டாக்டர் சுரேஷ்பாபு, திண்டுக்கல்லில் பெரிய ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.
அரசு மருத்துவர், தனியார் மருத்துவமனையை எப்படி நடத்தலாம் என, இவரை விசாரிக்க அமலாக்கத் துறையினர் முற்பட்டுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த டாக்டர் சுரேஷ்பாபு, தனக்கு வேண்டிய நபர்கள் வாயிலாக, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கார் டிக்கியில், அவருக்கு தெரியாமல் பணம் வைத்தாராம்.
பொதுவாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் வாடகைக்கு கார் எடுத்தே பயன்படுத்துவர். இதனால் இந்த விவகாரம் தொடர்பாக, அங்கித் திவாரி பயணித்த காரின் டிரைவரிடம் அமலாக்கத் துறையினர் தோண்டி துருவ ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் டாக்டர் லஞ்சமாக கொடுத்ததாக கூறப்படும் பணம், 40 லட்சம் ரூபாயை, அவர் எப்படி சம்பாதித்தார் என்பது தொடர்பான விபரங்களையும் அமலாக்கத் துறையினர் தோண்டி துருவுவர். இந்த விசாரணையால் தி.மு.க., தான் இனி நெருக்கடி.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க., அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில், டாக்டர் சுரேஷ்பாபு பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan