அகதிகளிடம் பரவும் HIV நோய்! - விழிப்புணர்வு இல்லாமல் 24,000 நோயாளிகள்!!

2 மார்கழி 2023 சனி 12:00 | பார்வைகள் : 11554
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, பிரான்சில் 200,000 பேர் HI வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 24,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு அவர்களது உடல் நிலை குறித்த விழிப்புணர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வீடற்றவர்கள் மற்றும் அகதிகளிடம் இந்த HIV பரவல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பத்தில் நால்வர் மிகவும் தாமதமாக தங்களது உடல்நிலமைகளை பரிசோதனை செய்துகொள்வதாகவும், இதனால் ஆரம்பகால சிகிச்சைகளை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIV தொற்றாளர்களுக்காக நீண்டகாலமாக செயற்பட்டு வரும் AIDES மற்றும் Sidaction associations அமைப்பினர், “அரசாங்கம் இதற்காக நிதி ஒதுக்கி தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பரவலாக முன்னெடுக்கவேண்டும்!” என கேட்டுக்கொண்டனர்.
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களது உடலினை பரிசோதனை செய்வது மிகவும் குறைந்துள்ளது. அகதிகள் பலரிடமும் HI வைரஸ் பரவல் இருப்பதை அவதானிக்கிறோம். பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் அகதிகள் மிக எளிதில் HIV தொற்றுக்கு உள்ளாகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025