குடிநீர் இன்றி தவிக்கும் Mayotte தீவு! - நேரில் செல்கிறார் பிரதமர்!!

1 மார்கழி 2023 வெள்ளி 16:00 | பார்வைகள் : 8576
பிரதமர் Élisabeth Borne, வரும் டிசம்பர் 8 ஆம் திகதி பிரெஞ்சுத் தீவான Mayotte இக்கு பயணிக்க உள்ளார். அங்கு பெரும் பேசுபொருளாக மாறியுள்ள குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை தொடர்பில் நேரில் பார்வையிட உள்ளார்.
பிரான்சின் 101 ஆவது மாவட்டமாகன குறித்த தீவு பெரும் வருமானம் குறைந்த மாவட்டமாகும். குடிநீர் பிரச்சனை பெரும் பூதாகரமாக வெடிக்க, அங்கு அகதிகளும் அதிகளவில் குடியேறி வருகின்றனர். குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான Comoros இல் இல் இருந்து பல ஆயிரக்கணக்கான அகதிகள் குறித்த தீவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
குறித்த தீவில் வசிக்கும் 310,000 மக்களுக்கும் கடந்த வாரம் அரசு இலவசமாக குடிநீர் வழங்கியிருந்தது. இந்நிலையில், குறித்த தீவின் எதிர்காலம் தொடர்பில் சில முடிகளை எடுக்க பிரதமர் அங்கு பயணிக்க உள்ளதாக அறிய முடிகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025