Paristamil Navigation Paristamil advert login

அதிகளவான கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்!!

அதிகளவான கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்!!

1 மார்கழி 2023 வெள்ளி 13:00 | பார்வைகள் : 9269


கடந்த சில மாதங்களாக பிரான்சில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. நவம்பர் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி பிரான்சில் 75,130 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் மொத்தமாக 61,000 கைதிகளுக்கான இடவசதி மட்டுமே உள்ள நிலையில், மேலதிகமாக 14,000 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சகம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஒக்டோபரில் 74,342 கைதிகளும், ஒருவருடத்துக்கு முன்னர் 72,809 கைதிகளும் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

கொவிட் 19 காலத்தின் போது சிறைக்கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்