பரிஸ் : பாடசாலைக்கு முன்பாக சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல்!!
1 மார்கழி 2023 வெள்ளி 11:00 | பார்வைகள் : 14345
16 வயதுடைய சிறுவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
rue du Général-Camou வீதியில் உள்ள lycée Gustave-Eiffel உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக புதன்கிழமை மாலை 6 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலாளிகள் (இருவர் அல்லது மூவர் என அறிய முடிகிறது) சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர் புகை வீசி குறித்த சிறுவனை திணறடித்த தாக்குதலாளிகள், பின்னர் கத்தியினால் சிறுவனைக் குத்தியுள்ளனர். SAMU மருத்துவக்குழுவினர் காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தாக்குதலாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan