காலதன் மீது கடும் கோபம் கொண்ட காதலியின் கொடுஞ்செயல்!

1 மார்கழி 2023 வெள்ளி 08:16 | பார்வைகள் : 9244
அமெரிக்காவில் 44 வயதான சந்த்ரா ஜிமினெஸ் என்ற பெண்மணி தனது காதலருடன் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
காதலன் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததாக தெரிகிறது.
தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரு வெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) வைத்துள்ளார்.
மற்ற பெண்களை காதலன் தொடர்ந்து பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடும் கோபம் வந்துள்ளது. இதனால் ஒரு ஊசியை எடுத்து காதலனின் கண்ணில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
காயமடைந்த காதலன் பொலிஸாருக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார்.
பொலிஸார் அவர்களது வீட்டிற்கு சென்று, காதலனை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, ஆண் நண்பரின் கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், காதலன் தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1