யூரோப்பா லீக் தொடர் - 199வது கோல் அடித்த வீரர்!

1 மார்கழி 2023 வெள்ளி 08:04 | பார்வைகள் : 5399
யூரோப்பா லீக் தொடரில் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் Anfied மைதானத்தில் நடந்த போட்டியில் லிவர்பூல்(Liverpool) மற்றும் லஸ்க் (Lask) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் லிவர்பூல் அணி வீரர் லூயிஸ் டயஸ் (Luis Diaz) தலையால் முட்டி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து முகமது சாலா பாஸ் செய்த பந்தை கோடி காக்போ (Cody Gakpo) நேர்த்தியாக கோலாக மாற்றினார். இதன்மூலம் லிவர்பூல் அணி முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் காக்போ பந்தை விரட்டி சென்றபோது கோல் கீப்பர் பந்தை கைப்பற்றும் முயற்சியில் அவர் மீது மோதினார்.
இதன் காரணமாக காக்போ தவறி விழுந்ததால் லிவர்பூல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்னர் முகமது சாலா மிரட்டலாக பேனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
இது லிவர்பூல் அணிக்காக அவர் அடித்த 199வது கோல் ஆகும்.
90+2வது நிமிடத்தில் காக்போ மீண்டும் ஒரு கோல் அடிக்க, லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் அணி 12 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1