Paristamil Navigation Paristamil advert login

காசாவில் நிரந்தர போர் நிறுத்த வேண்டும் - WHO

காசாவில் நிரந்தர போர் நிறுத்த வேண்டும் - WHO

1 மார்கழி 2023 வெள்ளி 07:56 | பார்வைகள் : 8013


இஸ்ரேல் - ஹமாஸ் போர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காசாவின் சுகாதார தேவைகள் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) கவலை தெரிவித்துள்ளார்.

காசா நிலமை தொடர்பில்  எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் ,

தற்போது காசாவில் மூன்றில் ஒருபகுதி மருத்துவ தேவைகள் மட்டுமே பெற முடிவதாக கூறியுள்ளார்.


நிரந்தர, போர் நிறுத்தம் மூலமே பொதுமக்களின் மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களின் துன்ப துயரங்களுக்கு முடிவு கட்டப்படும் என்றும் டெட்ரஸ் அதனம் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்