சிகிரியாவின் சூரிய உதயத்தை பார்வையிட நாளாந்தம் 3,000 டொலர் வருமானம்

1 மார்கழி 2023 வெள்ளி 06:59 | பார்வைகள் : 10614
சிகிரியாவில் சூரிய உதயத்தை சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதன் மூலம் நாளொன்றுக்கு மூவாயிரம் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடனில் சுமையாக இருந்த மத்திய கலாசார நிதியத்தின் டொலர் 614% அதிகரித்துள்ளது.
சிகிரியாவில் சூரிய உதயத்தின் அழகைக் காண வெளிநாட்டவர்களுக்குசந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் மூவாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் ஈட்டப்படுவதாகவும் நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கூடிய சமய விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தின் போது, சிகிரியாவைச் சுற்றியுள்ள இடங்கள் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரக்கூடிய துறைகளாக கண்டறியப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025