மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி மக்ரோன்!!

30 கார்த்திகை 2023 வியாழன் 16:33 | பார்வைகள் : 7600
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளார். நாளை மறுநாள் சனிக்கிழமை கட்டார் பயணிக்கும் மக்ரோன், அங்கு வைத்தே அவர்களை சந்திக்க உள்ளார்.
COP28 காலநிலை மாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற உள்ள நிலையில், அதில் பங்கேற்கவே ஜனாதிபதி மக்ரோன் அங்கு பயணிக்க உள்ளார். அதன்போது இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் மோதலில் மத்தியஸ்த நாடுகளான கட்டார், எகிப், இஸ்ரேல் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்க உள்ளார்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேலில் இடம்பெற்று வரும் இடம்பெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதலில் பல பிரெஞ்சுக் மக்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க மத்தியஸ்த நாடுகளிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எகிப்த்திய ஜனாதிபதி Abdel Fattah al-Sissi சவுதி இளவரசர் Mohammed bin Salman மற்றும் இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025